Monday, April 6, 2009

கல்வி வியாபாரத்துக்கு தடை !!!!! தேர்தல் சலுகை.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

"ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், மற்றது அனைத்தும்(பணம், புகழ்....) காலத்தால் அழியக் கூடியது " என்பது நமது வள்ளுவர் சொன்னது.

அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களை திணறடிக்கின்றனர். இத்தகைய இலவச திட்டங்கள் நம் மக்களை மேலும் சோம்பேறிகளாக்கி, அவர்கள் மூளை மழுங்கச் செய்யும் அரசியல்வாதிகளின் அறிய கண்டுபிடிப்புகள் என்பது என் கருத்து . "என் ரத்தத்தின் ரத்தமே" என்ற படத்தில் பாக்யராஜ் ஒரு நாள் உதவி செய்ய அதை நம்பி அடுத்த நாள் வேலைக்கு போகாத ரிக்க்ஷாக்காரன் கதை தான் இது ஆகும்.

இப்படித் தேவையில்லாத டி.வி இலவசம், லேப்டாப் இலவசம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுக்கின்றனர் தவிர மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியைப் பொதுவுடமை ஆக்குவதைப் பற்றி யாரும் வாய் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் இந்த அரசியல்வியாதிகள். காரணம், கல்வி வியாபாரம் செய்யபவர்களிடம் கமிசன் பெறுவது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்வி வியாபாரத்தளங்கள் நம் அரசியல்வாதிகளால் தானே நடத்தப்படுகிறது?.

இப்பொழுது சொல்லுங்கள் சின்ன பிள்ளைகளுக்கு ப்ளே ஸ்கூல் ஆரம்பித்து கல்லூரி படிப்பு முடிக்கும் வரை பணம் கொட்டக் கூடிய தங்க முட்டை இடும் வாத்து அல்லவா இந்த கல்வி வியாபாரம். இதை வெட்ட இவர்களுக்கு மனம் வருமா? புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள விஜயகாந்த் வரை அனைவரும் கல்வி நிறுவன அதிபர்கள் தானே.

"ஒருவ‌னுக்கு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உணவு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு அவன் உழைப்பில்." என்று ஒரு சீன‌ ப‌ழ‌மொழி உண்டு. ஆகவே "கல்வி பொதுவுடமை" என்ற கருத்து பளுப் பெற வேண்டும், "அனைவருக்கும் கல்வி('சர்வ சிக்ஷ அபியான்')" என்ற திட்டத்தை திருத்தி அனைவருக்கும் சமச்சீரான கல்வி ( அனைத்து கல்வி நிறுவனங்களில் ஒரே வகையான கல்வி தரம்) அமைய வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு பதிவு செய்கிறேன். புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கும் இந்த கல்வி வியாபாரம் தடை செய்யப்பட வேண்டும்.

4 comments:

நட்புடன் ஜமால் said...

\\புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கும் இந்த கல்வி வியாபாரம் தடை செய்யப்பட வேண்டும்.\\

ஆசைதான்

நடக்குமா!

இய‌ற்கை said...

:-)

nila said...

கல்வி வியாபாரப் பொருளாய் மாறிவிட்டது.... இந்த படிப்பிற்கு இவ்வளவு காசு என்று கூப்பாடு போட்டு கல்வியை விற்க ஆரம்பித்து விட்டார்கள்........ சந்தையில் பொருட்களின் விலை ஏறுவதைப் போல் கல்வியின் விளையும் ஏறிக்கொண்டே போகிறது.... இதில் எங்கே எல்லோருக்கும் சமமான கல்வி கொடுக்கபோகிறார்கள்..... இதில் வேடிக்கை என்னவென்றால் புதிதாய் பள்ளிக்கூடம் கட்டுபவன் எல்லாம் கல்வித்தந்தை என பேருக்கு முன்னால் அடைமொழி கொடுத்துக்கொள்கிறார்கள்.......
பால்வாடி பள்ளிக்கு play school என்று பேர் வைத்து அதற்கும் ஒரு லட்ச ருபாய்.... எங்கே போய் முடியுமோ இவை எல்லாம்..........

சந்துரு said...

கலந்துரையாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி..

/* நடக்குமா! */
முயற்சி செய்தால் நம்மால் செய்ய முடியாதது உண்டா?

Post a Comment