Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, December 22, 2010

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


என் உயிர் நண்பா....
இன்றோ உன் பிறந்தநாள். என் வாழ்வில் மறக்க விரும்பாத நாள்.
ஒரு கூட்டு பறவையாய் கூடிப் பழகிய நாட்கள் சிறிதெனினும்
சிறகுகள் கிடைக்க நான் இங்கு பறந்து வந்தாலும் ,
என் உயிரில் கலந்து நிற்பவன் நீ.

கால் நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த பொக்கிஷம் நீ.
என்னை கருவில் சுமந்தவளுக்கு பின் என் மனதில் நிறைந்தவன் நீ.
நான் கல்லறை சேரும் வரை காக்க விரும்பும் உறவு நீ.
பலருக்கு உலகத்தில் ஒருத்தன் நீ, எனக்கோ உலகமே நீ.

இன்று உன் விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துபவர் பலர்,
தினமும் உன் விருப்பங்கள் நிறைவேற வேண்டுபவன் நான்.
இன்று உன்னுடன் பழகிய நினைவுகளை அலசுவர் பலர்,
தினமும் உன் நினைவுகளுடன் வாழ்பவன் நான்.

வாழ்க்கை அனுபவங்கள் உன்னை மேலும் மெருகேற்றட்டும்.
பட்டை தீட்ட பட்ட வைரமாய் நீ மின்னுவாயாக.
நலம் வாழ எந்நாளும் இந்த நண்பனின் வாழ்த்துக்கள்!

Monday, November 15, 2010

ஞாபகங்கள்


















பிரிவுகளின் பாரத்தை மனதில் சுமந்து,
கனவுகளை நோக்கி பயணம் தொடர
மனதின் வாசலில் பழைய முகங்கள்,
பழைய ஞாபகங்கள் புயலாய் வீசுகின்றன.

கண்கள் குளிர காட்சிகள் பல கண்டாலும்,
என் கண்கள் முழுக்க உங்கள் பிம்பங்களே நிறைந்துள்ளன,
உங்கள் முகம் காண ஏங்குகின்றன.

காதுகள் இனிக்க பலர் பேசினாலும்,
நீங்கள் பேசிய வார்த்தைகள் மட்டும் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டு இருக்கின்றன,
உங்கள் குரல் கேட்க தவம் இருக்கின்றன்.

வாய்கள் வலிக்க நான் பேசினாலும்,
உங்களுடன் ஒரு வார்த்தை பேச துடிக்கின்றன.

வாழ்க்கை பாதை எங்கு சென்றாலும்,
நீங்கள் தான் என் வாழ்க்கை, உங்களிடம் தான் என் சந்தோசம் உள்ளது.
இலக்குகள் புதிது, பாதைகள் புதிது,
மனதில் உள்ள உங்கள் ஞாபகங்கள் என்றும் புதிது.

உங்கள் ஞாபகங்கள் என்னிடம் உள்ளவரை,
நம்மை யாரும் பிரிக்க இயலாது.
என் உயிர் உள்ளவரை,
உங்கள் ஞாபகங்களை மறக்கவும் இயலாது.

Saturday, October 2, 2010

என் இதய களவானி


அதிகாலை நீ எழுந்தவுடன் என் நெற்றியிலே
முத்தமிட வேண்டும்.
விடியலில் உன் மஞ்சள் முகம் கண்டு, நான்
கண்விழிக்க வேண்டும்.
உன் வாசம், என் சுவாசமாக வேண்டும்.
என் தலை சாய உன் மடிதந்து, என் தலைகோத உன் விரல் தந்து,
என் மார்பில் உன் தலை சாய,
அனைத்திட வேண்டும்.
உலகையே மறந்திட வேண்டும்.
கள்ளமில்லா உன் சிரிப்பிலே, கவலையை
மறந்திட வேண்டும்.
நாம் என்றும் பிரியாமல் இருக்க
வரம் வேண்டும்.
களவாடி சென்ற என் இதயத்தின் மாற்றாக, உன் இதயத்தை தர வேண்டும்.
இவை அனைத்துக்கும், என் மனைவியாய் நீ
வர வேண்டும்
இதற்கு நம் பெற்றோர் அனுமதி தர வேண்டும்

Sunday, August 1, 2010

நானும் + நீயும் = நாம்.


பொய்யாக உன்னை கோவிக்க
தெரிந்த எனக்கு,
மெய்யாக எதையும் மறைக்க
தெரியவில்லை உன்னிடம்.
என் உயிர் போக உன்னை என்னையும்
தொட்டு விடாத தூரத்தில் வைத்தான் காலன்,
என் உயிர் வாழ உன் நினைவுகளை
சுவாசிக்க கற்று கொண்டேன் நான்.
அழகான வார்த்தை திருடி
கவிதை எழுத தோன்றிய எனக்கு,
நம் நட்பு சிறையின் சாவியை
திருட தோன்றவில்லை எனக்கு.
இன்றோ,
உலகத்தில் ஒரு முனையில் நீ,
இன்னொரு முனையில் நான்,
ஆனால் என்றோ,
நீயும் நானும் நாமாகி போனோம்.
வாழும் வயது முடியும் வரை,
பிரிவு என்பது இனி என்றுமில்லை,
சந்தன காப்பாக நம் அன்புள்ளவரை.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Friday, October 9, 2009

காதலுக்கு முன்(கா.மு)..... காதலுக்கு பின்(கா.பி).....


அன்றோ, பேசுவதற்கு நிறையுண்டு ,
கேட்பதற்கு என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, கேட்பதற்கு என்னவளுண்டு ,
பேசுவதற்கு முடியவில்லை, அவசியமுமில்லை.

அன்றோ, காத்திருக்க நேரமுண்டு ,
காக்கவைக்க என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, காக்கவைக்க என்னவளுண்டு,
காத்திருக்க முடியவில்லை, நேர்ந்தில்லை.

அன்றோ, கோபப்பட விருப்பமுண்டு,
ஊடல் செய்ய என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, ஊடல் செய்ய என்னவளுண்டு,
கோபப்பட முடியவில்லை, விரும்பவுமில்லை.

அன்றோ, காதலிக்க ஆசையுண்டு
காதலிப்பார் யாருமில்லை.
இன்றோ, காதலிக்க கன்னியுண்டு,
தடைசெய்ய வேண்டியதில்லை, தேவையுமில்லை.

Tuesday, September 22, 2009

காதல் கோட்டை... தேடுதல் வேட்டை...

நிலாவில் நடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. காலையில் உன்னுடன் மணலில் நடக்க தேடுகிறேன்.

என் கவிதை படிக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னையே படிக்க தேடுகிறேன்.

என்னை அடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னுள் அடங்க தேடுகிறேன்.

என்னிடம் தோற்க்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னிடம் தோற்க்க தேடுகிறேன்.

என்னை மயக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னை மணக்க தேடுகிறேன்.

என் உடல் பசிக்கு தேடுகிறேனா உன்னை ?
இல்லை. என் ஆத்ம பசிக்கு தேடுகிறேன்.


சாலையில் செல்லும் பொழுதும் தேடுகிறேன்,
வேலை செய்யும் பொழுதும் தேடுகிறேன்,
என்று முடியுமோ இந்த தேடுதல் வேட்டை.