Tuesday, April 28, 2009

கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டமும் ஆதரவு அலையும்


இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழினத் தலைவராம், முத்தமிழ் அறிஞர், வாழும் வள்ளுவர், தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இறங்கினார். வயதான காலத்தில் உண்ணாநோன்பிருந்து தமிழர்களுக்காக கஷ்டப்படுகிறார், நெடுங்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர், காங்கிரஸை மிரட்டிப் பணிய வைத்தார் என்று நமது வலைதள உலகத்தில் ஆதரவு அலை விசியது. எதிர்ப்பு அலைக்கு எதிராக பார்பானியத்தை எதிர்த்த கோபம்தான் கலைஞரை திரும்பிய பக்கம் எல்லாம் தாக்குகின்றது என்றும் எழுதினார்கள்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்காக எழுதிய நண்பர்களே நீங்களே சற்று அமைதியாக கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அவர் நினைத்து இருந்தால் எவளவோ செய்து இருக்க முடியும், மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் இலங்கையில் போர் நிறுத்தம் எப்பொழுதோ நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். தி.மு.க ஆதரவு இல்லாமல் மத்திய அரசை காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து இருக்க முடியுமா? இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையும் இருந்திருக்காது.

ஆனால் அவரோ தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், மனிதசங்கிலி போராட்டம், மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு தந்தி அனுப்புவது, கடிதம் எழுவது, பொது வேலை நிறுத்தம் என்று எத்தனை எத்தனை நாடகங்கள். அவர் நாடகங்கள் என்று எழுதியதை காட்டிலும் இந்த நாடகங்களின் எண்ணிக்கை அதிகம் என்று நினைக்கிறேன். கடைசி நாடகம், தவறு தற்போதிய நாடகம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டமும்.

மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இலங்கை போர்நிறுத்தம் கொண்டு வந்திருக்கும். ஒருவேளை காங்கிரஸ் கட்சி இங்கு தமிழகத்திலும் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றால், மீண்டும் தேர்தல் சந்தித்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திரும்பவும் ஆட்சி கட்டில் ஏறி இருக்கலாம். கவிஞர் தாமரை கூறியது போல், அவர் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.

எனினும்
ஈழப் பிரச்னையை பொறுத்தவரை யார் அமாவாசை? என்று அவர் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அவரின் இந்த நாடகங்களுக்கு நீங்கள் வரவேற்ப்பு தருவதா வேண்டாமா என்று?

7 comments:

E said...

Good one.. Keep blogging..

Mothiyoci said...

muka al mattum tan entha alavavathu sayal pada mudinthathu... ethuve jaya vaga eruntal
so....marathum kooda jaya vara koodathu... its good for our tamilnadu

Anonymous said...

//மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றிருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இலங்கை போர்நிறுத்தம் கொண்டு வந்திருக்கும். ஒருவேளை காங்கிரஸ் கட்சி இங்கு தமிழகத்திலும் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றால், மீண்டும் தேர்தல் சந்தித்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திரும்பவும் ஆட்சி கட்டில் ஏறி இருக்கலாம்//

லூசாப்பா நீயி?

ஆட்சிகாலம் முடிய ஆறுமாசம் இருக்கும்போது வாபஸ் வாங்குனா என்ன கூட இருந்தா என்ன? எப்படியும் காபந்து அரசா காங்கிரஸ் தானே நீடிச்சிருக்கும்.

ஆமா ஆமா. தொண்ணூற்றி ஒண்ணு தேர்தலிலே சட்டசபையிலே 234 இடங்களும், பாராளுமன்றத்திலே 40 இடங்களும் ஜெயிக்க வெச்சீங்க பாருங்க.

போங்க சார் வேலைய பாத்துக்கிட்டு.

M.Senthil Kumar said...

சு ....
அப்பா ...........
இப்பவே கண்ணா கட்டுதே ..............

Anonymous said...

தி.மு.கவுக்கு ஆட்சி தான் நோக்கம்.அதற்காக என்ன நாடகம் நடிக்கவும் தயார்,
பெரியாரிசம் பேசி மக்களை ஏமாற்றி கொண்டு பாரதிய ஜனதாவுடன்
கூட்டு சேர்ந்தவர்கள் தானே.

மக்கள் பாவம், இப்ப யாருக்கு தான் வோட்டு போடுவது என தலையை பிய்த்துக்கொண்டு
இருக்கிறார்கள்.

சந்துரு said...

/ * லூசாப்பா நீயி?

ஆட்சிகாலம் முடிய ஆறுமாசம் இருக்கும்போது வாபஸ் வாங்குனா என்ன கூட இருந்தா என்ன? எப்படியும் காபந்து அரசா காங்கிரஸ் தானே நீடிச்சிருக்கும். */

இப்பொழுது நடக்க இருக்கும் தேர்தல் அப்பொழுதே நடந்திருக்கும். அப்பொழுது இருந்த சூழ்நிலைக்கு நிச்சயம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்காது. புதிய அரசுவாது எதாவது செய்யும் என்று ஒரு நப்பாசை

/* muka al mattum tan entha alavavathu sayal pada mudinthathu... ethuve jaya vaga eruntal
so....marathum kooda jaya vara koodathu... its good for our tamilnadu*/

என்னைப் பொறுத்தவரை மு.க தான் அமாவாசை. ஜெயா அவரை காட்டிலும் மேல்.

கலந்துரையாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி..

ttpian said...

உதிர்ந்த ரோமமடா Mu Ka!
உன்னை சொல்லி குட்ரமைல்லை:என்னை சொல்லி குட்ரமில்லை!
தமிழனாக இருந்த நான்,இப்போ இந்தியனாக மார்...அம்மணமாக

Post a Comment