இன்னும் இரண்டொரு நாளில், உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. வெறும் வாழ்த்துக்களுடன் நில்லாமல், அந்த தினத்தில் கண்டப்பாக விவாதிக்க படும் பெண் சுதந்திரம், பெண் உரிமை பற்றி என் கருத்துக்களை இங்கு பதிக்கிறேன். பெண் சுதந்திரம் என்று எடுத்து கொண்டால், பல துணை கேள்விகள் எழும். பெண்ணுக்கு எதற்காகச் சுதந்திரம் வேண்டும்? எதற்கெல்லாம் பெண்ணுக்குச் சுதந்திரம் தேவை? எப்பொழுதெல்லாம் தேவை? எந்த அளவிற்குத் தேவை அதாவது அதன் எல்லை என்ன? யாரிடமிருந்து அல்லது எதனிடமிருந்து சுதந்திரம் தேவை? என் தலைப்பிலிருந்தே எதை பற்றி பேச போகிறேன் என்று யூகித்து இருப்பிர்கள்.
இக்கால பெண்கள் சிலர்(சிலரா, பலரா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்), பெண் சுதந்திரம் என்பது ஜீன்ஸ் போன்ற மேற்கத்திய ஆடைகள் உடுத்துவது, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது, நண்பர்களுடன் வெளியே சுற்றுவது, பெரியவர்கள் சொல்லுவதை எதையும் கேட்காமல் இருப்பது, தாங்கள் எடுத்த முடிவுகள் மட்டுமே சரியானது என்று இருப்பது, விட்டு கொடுக்காமல் பிடிவாதம் பிடிப்பது,இப்படி சொல்லி கொண்டே போகாலாம்.
நம் பெற்றோர் நம்மை நெறிப்படுத்த விதிக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பெண் சுதந்திருக்கு முட்டுக்கட்டை போன்றே சித்தரிக்க படுகின்றன. துஷ்டனை கண்டால் தூர விலகு என்பார்கள். அதனால் தம் குழந்தைகள் காக்க படவேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட வயதிருக்கு மேல் பெண்கள் அரைகுறை ஆடை அணிய தடை, நேரத்திருக்கு வீடு வந்து சேர வேண்டும், எங்கு சென்றாலும் சொல்லி விட்டு செல்ல வேண்டும் உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்க படுகின்றன. சிறிது உற்று நோக்கினாள், ஒரு குறிப்பிட்ட வயது வரை ஆண் குழந்தைகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் உள்ளன. பின்னர் தளர்த்தி கொள்ளபடுகிறது. அனால் பெண்களை பொறுத்தவரை அதன் பின் தான் இன்னும் கடுமையாக்க படுகின்றது. ஆனால் இது அவர்கள் நன்மைக்கே என்பதை உணர வேண்டும். இது போன்ற கட்டுபாடுகள் இல்லாத மேலை நாடுகளில் தான் சிறு வயதில் கரு தருபதிப்பது அதிகம். அது நம் நாட்டுக்கும் தேவையா?
அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஒபாமா தன் வேலையை விட்டுவிட்டு எதை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை உலக மீடியாவே போட்டுடைத்து விட்டது..
ஒபாமா அல்ல வேறு யாரும் இருந்தால் இதை விட மோசமாக கூட நடந்து கொள்ளலாம்.இங்கே நாம் சொல்ல வருவது ஒபாமா ஏன் இப்படி என்பதல்ல ? அந்த பெண் ஏன் இப்படி உடை அணிய வேண்டும் என்பதே.தலை முதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை அணிந்து, ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பிரான்ஸ் வீராங்கனையைப் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்து ஹிஜாபி புகைப்படத்தையும் இங்கு பதிந்துள்ளேன். அதற்கா பர்தா அணிய சொல்லவில்லை, கணியமாக உடை அணியலாம் அல்வா?
ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும் எதிர் பாலர்காளால் கவர படுகின்றன. அது தவறு என்று சொல்ல முடியாது, அது படைப்பின் தவறு. ஜீன்ஸ் போட்டாலும் துருதுருன்னு பாக்குறானுங்க. தாவணி போட்டாலும் இடுப்ப பாப்பானுங்க. இது உடுத்துரவங்க குத்தமா? பாக்குறவன் குத்தமா?. நாம் முறையாக உடை உடித்தினால் ஒரு சில வகரமான ஆண்களுக்கு மட்டுமே அந்த மாதரி பார்க்க தோன்றும், ஆனால் அரைகுறை ஆடை உடித்தினால் நடுதரமானவர்களையும் சுண்டி இழுக்கும். எதற்காக அவங்க கஷ்டப்பட்டு பார்க்கணும் நம்மளே காமித்து விடலாம்னு நினைப்பது சரியா?.
கல்யாணத்திற்கு பிறகு குடும்ப பிரச்சனைகளில் விட்டு கொடுத்து செல்வது என்பது பெண் சுதந்திரத்துக்கு எதிரானது. சுதந்திரம் என்பது என்ன? ஆண்- பெண் உறவு முறைகளில் யார் உயர்ந்தவர்கள்,யார் தாழ்ந்தவர்கள் என்று பார்ப்பதா அல்லது ஆண் சமையலுக்குப் போகட்டும்;நான் அலுவலகத்திற்குப் போகிறேன். இல்லை; தனக்கு வேண்டும் என்பதைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கின்ற ஒரு மனப்பக்குவம் வருவதுதான் சுதந்திரம். குடும்பத்திற்காக சிலவற்றை விட்டு கொடுத்து செல்வதில் எந்த தவறும் இல்லை. உணர்வு பூர்வமான சார்பு நிலையிலிருந்து வெளியே வரமுடியாது – அதனால், அதைப் பற்றிய புரிதலாவது வேண்டும். மண வாழ்க்கையில் மட்டுமல்ல பொதுவாகவே, எந்த சண்டை போட வேண்டும் எந்த சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்று தேர்வு செய்யப் பழகுவது நல்லது தானே?
உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச்சரியான ஒரு பெண்ணாய் ஆகும் மாற்றம். ஆணின் நகலாக அல்ல. ஆனால் இப்பொழுது அது தான் நடந்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் சிகரெட் பிடிக்க வேண்டும். ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள்.
இன்னும் அடிக்கி கொண்டே போகாலாம். சிந்தியிங்கள் தோழிகளே. நம் நாட்டுக்கு தேவை பெண் சுதிந்திரமா ? பெண் விடுதலையா? இந்த உலகின் படைக்கும் கடவுள் பிரும்மா என்கிறது இந்து மதம். அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி நமக்கு இப்பொழுது வேண்டாம். ஆனால் ஆணோ, பெண்ணோ நம்மை இவ்வுலகுக்கு கொண்டு வர தங்கள் உயிரையே பணையம் வைக்கிறார்களே நம் நிஜ பிரம்மாக்கள் அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்
நன்றி: இப்பதிப்பில் உள்ள சில வரிகள் பிற நண்பர்கள்/நண்பிகள் வலைத்தளத்தில் நான் படித்தவை
No comments:
Post a Comment