Saturday, February 20, 2010

மீண்டும் ஒரு முறை

நான் கடைசியாக உங்களுடன் என் உணர்வை பகிரிந்து மாதங்கள் பல கடந்துவிட்டன. வெளிநாடு வந்தால் தான் எங்கள் நியாபகம் வருமா? என்று நீங்கள் கேட்ப்பிர்கள். நான் உங்களை எப்பொழுதும் மறந்தது இல்லை. ஆனால் இந்தயாவில் இருக்கும் பொழுது நேரம் ஏதோவது ஒரு வகையில் கழிந்துவிடுகிறது.

அதற்காக வெளிநாடு வந்தவுடன் நான் நேரத்தை சிக்கனமாக, முறையாக பயன்படுத்துகிறேன் என்று சொல்ல முடியாது. இங்கு நான் வரும் பொழுதெல்லாம் பனி காலத்தில் வருகிறேன். அதுவும் பனி அதிகம் வையும் நாடுகளுக்கே வருகிறேன். அதனால் வெளிய போக ஒரு jerkin, குல்லா, thermal wear இப்படி எல்லாம் இல்லாம போக முடியல. போனாலும் எப்ப வீட்டுக்குபோவோம்? என்ற மனநிலை ஏற்படுத்திகிற குளுரு.

பனி நமக்கு காண கிடைக்காத ஒன்று என்பதால் சில நாட்கள் ஒரு பரவசம். ஆனால் பிறகு அதுவே நமக்கு கசக்க ஆரம்பித்து விடுகிறது. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர். விட்டுக்கு வந்தா மட்டும் என்ன செய்கிறோம்? பெரிதாக ஒன்றும் இல்லை.

சமையல் செய்து சாப்பிடுவது, இன்டர்நெட்டில் படம் பார்ப்பது, ஆன்லைன் உள்ள நண்பர்களுடன் பேசுவது இப்படி என்ன செய்தாலும் கண்டிப்பாக உங்களுடன் பகிரிந்து கொள்ள நேரம் கிடைத்து விடுகிறது. ஆகையால் மீண்டும் ஒரு முறை என்னுடைய பயணத்தை ஆரம்பிக்கிறேன் உங்களுடன்.

எப்பொழுதும் போல் என் எழுத்துப்பிழைகளை மன்னித்து, என் கிறுக்கலின் மீதான உங்கள் கருத்துகளை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள். நன்றி.

Friday, October 9, 2009

காதலுக்கு முன்(கா.மு)..... காதலுக்கு பின்(கா.பி).....


அன்றோ, பேசுவதற்கு நிறையுண்டு ,
கேட்பதற்கு என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, கேட்பதற்கு என்னவளுண்டு ,
பேசுவதற்கு முடியவில்லை, அவசியமுமில்லை.

அன்றோ, காத்திருக்க நேரமுண்டு ,
காக்கவைக்க என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, காக்கவைக்க என்னவளுண்டு,
காத்திருக்க முடியவில்லை, நேர்ந்தில்லை.

அன்றோ, கோபப்பட விருப்பமுண்டு,
ஊடல் செய்ய என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, ஊடல் செய்ய என்னவளுண்டு,
கோபப்பட முடியவில்லை, விரும்பவுமில்லை.

அன்றோ, காதலிக்க ஆசையுண்டு
காதலிப்பார் யாருமில்லை.
இன்றோ, காதலிக்க கன்னியுண்டு,
தடைசெய்ய வேண்டியதில்லை, தேவையுமில்லை.

Tuesday, September 22, 2009

காதல் கோட்டை... தேடுதல் வேட்டை...

நிலாவில் நடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. காலையில் உன்னுடன் மணலில் நடக்க தேடுகிறேன்.

என் கவிதை படிக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னையே படிக்க தேடுகிறேன்.

என்னை அடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னுள் அடங்க தேடுகிறேன்.

என்னிடம் தோற்க்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னிடம் தோற்க்க தேடுகிறேன்.

என்னை மயக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னை மணக்க தேடுகிறேன்.

என் உடல் பசிக்கு தேடுகிறேனா உன்னை ?
இல்லை. என் ஆத்ம பசிக்கு தேடுகிறேன்.


சாலையில் செல்லும் பொழுதும் தேடுகிறேன்,
வேலை செய்யும் பொழுதும் தேடுகிறேன்,
என்று முடியுமோ இந்த தேடுதல் வேட்டை.