Monday, March 8, 2010

100 வது உலக மகளிர் தின சிறப்பு இடுகை

இந்த உலகின் படைக்கும் கடவுள் பிரும்மா என்கிறது இந்து மதம். அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி நமக்கு இப்பொழுது வேண்டாம். ஆனால் ஆணோ, பெண்ணோ நம்மை இவ்வுலகுக்கு கொண்டு வர தங்கள் உயிரையே பணையம் வைக்கிறார்களே நம் நிஜ பிரம்மாக்கள் அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
தாய்மாருகளுக்கு மட்டும் தான் நான் வாழ்த்து தெரிவித்துள்ளேன் என்று தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். ஆண்களை காட்டிலும் பெண்களை உயர்த்தி காட்டும் தகுதிகளில் முதன்மையானத்தை தான் மேலே குறிப்பிட்டேன். "மகளிராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்" என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் ஒளவை பெருந்தகை பாடியதை விட என்ன சான்று வேண்டும் பெண்களின் சிறப்பை எடுத்துரைக்க.
தாய்நாடு, தாய்மொழி இன்று எல்லாவற்றிலும் பெண்ணை, நம் முன்னோர் முதன்மை படுத்தியதில் இருந்து ஆதிக் காலத்தில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவும் தந்துள்ளனர் என்பது தெளிவாகும்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் இந்த பெண் அடிமை தனம். இந்த உலகின் மிக கொடிய இந்த காளானை முளையிலையே கிள்ளி எரிய மறந்து விட்டனர் நம் முன்னோர். இது நடுவில் வந்ததே. இது அறுத்தெடுக்கும் பொறுப்பு நம்முடையதே. இது களைய பட்டு கொண்டு இருக்கிறது இப்பொழுது. நம் நாட்டின் ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர், ஆளும் ஐக்கிய முன்னேற்ற கூட்டணி தலைவி என்று நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இப்பொழுது பெண்கள் உள்ளனர்.
ஆனால் வேகமாக களைய வேண்டும் அதுவும் முழுமையாக. அதற்கு ஏற்றார் போல் 100 வது உலக மகளிர் தினமாக இன்று நமது ராஜ்யசபாவில், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகின்றது. இதை எதிர்க்கும் கட்சிகள் தயவு செய்து இதை இப்பொழுது நிறைவேற்றி விட்டு பிறகு உள் ஒதுக்கீடு பற்றி அலசி ஆராயட்டும். இன்னொரு அரசியல் சட்ட திருத்தம் செய்வது என்பது ஒன்று பெரிய விஷயம் இல்லை. நம் இந்திய பெண்களுக்கு மகளிர் தின பரிசாக இதை தர வேண்டும்.

No comments:

Post a Comment