Saturday, February 21, 2009

மத்திய அரசுக்கு ஒரு யோசனை - இலங்கை பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய இயலும்?

நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி, 'போரை நிறுத்தச் சொல்லி இலங்கையை இதற்கு மேல் நம்மால் வற்புறுத்த முடியாது. காரணம், பிறநாட்டுப் பிரச்னையில் ஓரளவுக்கு மேல் நம்மால் தலையிடமுடியாது' என்று கூறியுள்ளார். இந்தியா இறையான்மை என்று சொல்லிக் கொண்டு இனியும் அமைதி காத்தால், பல்லாயிரம் அப்பாவி மக்கள் இறப்பதற்கு நாமும் ஒரு முக்கியக் காரணமாகி விடுவோம். உலக நாடுகளுக்கு முன்னுதாராணமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசுக்கு ராணுவ உதவி வழங்கும் நாடுகளில் முதல் இடம் யார் பெறுவார்கள்? நாம் தானே. உதவிச் செய்ய என்ன காரணம் கூறுகிறோம்?. அந்த ராஜதந்திரக் காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அதை நாம் சிறிது புறம் தள்ளிவிட்டு இக்கனத்தில் இருந்தாவது ராணுவ உதவி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் வரிப்பணத்தால் எந்த ஒரு அப்பாவி உயிரும் இனியாவது பலியாகாமல் காத்திடுங்கள்.

போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த இலங்கை அரசை வலியுறத்த வேண்டும். அதை இலங்கை அரசு நிறைவேற்றாதப் பச்சத்தில் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்.


ஐக்கிய நாடுகள் சபையை உடனடியாக கூட்ட முயற்சிக்க வேண்டும். அனைத்து நாடுகளையும் மேற்குறிய இரண்டுச் செயல்களையும் செய்ய வலியுறத்த வேண்டும்.


நான் எதுவும் புதிதாக கூறவில்லை, என்னை போன்ற கோடிக்கணக்கான மக்களின் கருத்து தான் இவை அனைத்தும். இவை தமிழக மக்களின் எண்ணம் மட்டும் அல்ல. இந்தியராக பிறந்த அனைவருடையதும். ஏனெனில் நாங்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தாரக மந்திரத்தில் நம்பிகை உள்ளவர்கள். இந்திய நாட்டில் வாழும் சாதரண குடிமக்களாகிய எங்களுக்கே இவை தெரிகிறது என்றால் இந்த நாட்டை ஆளும் உங்களுக்கு தெரியாமலா இருக்கும். தயவு செய்து மீதம் உள்ள எம் மக்களையாவது காப்பாற்றுங்கள்.

7 comments:

Krishna said...

I agree with this article 100% STOP THE WAR in Srilanka, save the remaining people from destruction of senseless racist war by srilinkan govt...

Anonymous said...

This idio congress and selfish karunanith government is seems to be like tamils to live in eelam. Thier view Tamils should die in eelam and thier policy is moving towards this only. I dont think indian and current tamil nadu government can do anything for tamils in eelam. we need to approach international communities and mainly we need to appeal to government of USA.

nila said...

இந்த சுயநல உயிரற்ற அரசுக்கும் அதை ஆட்டுவிக்கும் கதர் சட்டைகளுக்கும் நம் வரிப் பணத்தைப் பற்றி என்ன கவலை.. அழுகேராத புத்தம் புதிய நோட்டுக்கட்டுகள் பெட்டி பெட்டியை தேடி வந்து சேரும் பொது மக்களைப் பற்றி என்ன கவலை...
அதுவும் இப்போது அவர்களுக்கு வரும் நோட்டுக்கட்டுகள் தமிழனின் இரத்தம் தோய்த்தல்லவா வருகிறது... அதில் உப்பும் காரமும் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும்... ருசி பார்த்த பூனைகளிடம் இரத்தம் வருவதைத் தடுக்கும் மருந்தை எதிர்பார்க்கலாமா????

Anonymous said...

Isn't it a double standard on our side to stop Srilanka? On the one hand we ask pak not to support terror in POK and IOK and on the other hand we ask srilanka not to fight LTTE (who have taken arms in their hands) ?
There should not be any war/killing of comman man in any part of the world be it Israel/Palestine or Srilanka or Kashmir or IRAQ. At this point we shall hope that conflict in Srilanka ends soon and make sure tamils in Srilanka (in diplomatic way)are given their share of pie.LTTE should give up their arms.

One more request if we really care abt our tax money, please do not burn buses and public vehicles, do not stop parliament sessions, please help in normal functioning of courts. No more self immolation :-( please

sim

சந்துரு said...

நண்பரே, நானும் தங்களைப் போன்று பொதுச்சொத்தினை சேதபடுத்துவதை வண்மையாக கண்டிக்கிறேன். இலங்கை மட்டுமல்ல உலகில் எங்கும் இதுப்போன்ற போர் நடக்க நாம் யாரும் விரும்பவில்லை.அதேப்போல் காஷ்மீர் தீவிரவாதத்தையும் இலங்கையில் நடப்பதையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காதிர்கள். இப்போர் நடைபெற முக்கிய காரணம் என்ன என்று அலசினோம் என்றால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில் இனபாகுபாடு மற்றும் அதை மெருகூட்டும் இனப்பாகுபாட்டு சட்டங்களும் தான். இதுப்போன்றவை இந்தியாவில் உள்ளதா என்று தாங்களே கூறுங்கள்?. அப்பாவி மக்களின் உயிரைக் காக்க நாம் என்ன்ச்செய்ய இயலுமோ அதை தான் இந்தியாவிடம் நாம் கேட்க்கிறோம்.

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Senthil Nathan said...

"இனபாகுபாடு மற்றும் அதை மெருகூட்டும் இனப்பாகுபாட்டு சட்டங்களும் தான்". Can anyone quote here and tell me what are these laws. Can we force the srilankan government to remove these laws. If possible we must do that with the help of UN. We must support the srilankan tamils but at the same time we must not support any organisation indulging in violence. Pakistan and even bangladesh thinks India as Enemy. China thinks India as enemy even though it feigns and acts like a friend. Pakistan is creating problems in kashmir and western border in the name of terrorism. China is creating problems in northern border, assam and arunachal pradesh with maoists. Northeast states contribute their own share of head ache for India. Atleast tamil nadu is a peaceful state without major problems. If you force the singhaleese too much then a group of extremist sinhalese will create a terrorist group and start giving problem from south. So try to solve the problem without creating new problem for ourselves. dont make srilanka and sinhaleese think that india is their enemy. it is not good for us in long term. this is like untying a knot. you have to untie it carefully. otherwise it will become a tangled mass which will remain a impossible problem to solve for ever.

UK ( England ) is the first culprit in this problem. If srilanka was just another state in India, this problem would have never arised in the first place. They tried to control India by leaving sri lanka as a seperate country instead of another state of India. (tamilil type seyathatharku mannikavum).

Post a Comment