Sunday, February 15, 2009

எம் மக்களை உயிரோடு விடுங்கள் - உலக தலைவர்களுக்கு பகிரங்க கோரிக்கை


உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் முதல் உணர்வு, இந்த பரந்து விரிந்த உலகத்தில் வாழும் பல்லாயிரம் மக்களுடன் சம்மந்தப்பட்டது என்பதை விட என் சக தமிழனுடன் சம்மந்தப்பட்டது என்பது என்னை இன்னும் கடும் துயரத்தில் ஆழ்த்துகிறது. எல்லா மக்களும் ஒன்று தான், ஏன் இந்தப் பாகுபாடு என்று உங்களுக்குத் தோன்றலாம் ?. உங்களுக்கு தொடர்பு இல்லாத எவரோ ஒருவர் அகலாமரணம் அடையும் பொழுது உங்களக்கு ஏற்படும் துயரத்தை விட உங்கள் ரத்த சொந்தத்தில் நடக்கும் பொழுது ஏற்படும் துயரம் அதிகம்.


இலங்கை உள்நாட்டுப் போரால் தினமும் இலங்கை ராணுவத்தினரும், விடுதலைப்புலிகள் மட்டுமல்ல பல நூறு அப்பாவி மக்களும் உயிரிழக்கின்றனர் . விடுதலைப்புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என்பதற்கு அப்பால் இலங்கையில் வாடும் அப்பாவி மக்களைப் பற்றி இவ்வுலகம் சிந்திக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை.


ராஜீவ் காந்தியை படுகொலை செய்தனர் என்று விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. நன்று, அதில் சம்மந்தப்பட்டவர்களை கண்டுப்பிடித்து தண்டனையை தாருங்கள், வேண்டாம் என்று நான் ஒருபொழுதும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றும் அறியாத மக்கள் செத்து மடிவதற்கு காரணமான இப்போரை நிறுத்த இந்தியா மட்டும் அல்லாமல் அனைத்து உலக நாடுகளும் தீவிரமாக ஏன் முனையவில்லை என்பது தான் என் ஆதங்கம்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்ட நளினியின் தண்டனையை குறைக்க திருமதி.சோனியா காந்தி அவர்கள் பரிந்துரை செய்தது கருணையின் வெளிப்பாற்றுக்கு சிறந்த எடுத்துகாட்டு. அதே போன்ற ஒரு கருணையை மீண்டும் ஒரு முறை அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.அனைத்து கட்சி தமிழக தலைவர்கள் மட்டுமின்றி இந்திய தலைவர்களுக்கும் கோரிக்கை வைக்கின்றோம், உங்கள் அரசியல் லாப நஷ்ட கணக்குகளை சிறிது புறம் தள்ளிவிட்டு ஒரு அணியில் திரண்டு மீதமுள்ள எம் சகோதர மக்களின் உயிரையாவது காக்க குரல் கொடுப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் ஆவணம் செய்ய வேண்டும்.


இதில் இந்தியா உட்ப்பட உலக நாடுகள் என்ன செய்ய இயலும் என்று அடுத்த கேள்வி எழலாம்?. இப்போர் நடைபெற முக்கிய காரணம் என்ன என்று அலசினோம் என்றால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில் இனபாகுபாடு மற்றும் அதை மெருகூட்டும் இனப்பாகுபாட்டு சட்டங்களும் தான். எனவெ இது போன்று நடைபெறாமல் தடுத்து, நடைபெற்றதால் ஏற்பட்ட இன்னல்களைப் போக்கி இலங்கையில் அமைதி திரும்ப வழி செய்ய வேண்டும். உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்தி மீதம் இருக்கும் எம் மக்களையாவது காக்க வேண்டும் என்று இவ்வுலக தலைவர்களை இரு கரம் குப்பி கேட்டுக் கொள்கிறேன்.
உங்களால் முடியும் துணிந்து முயற்சி செய்யுங்கள் உலக மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்பர். வாழ்க உலக சமுதாயம். வளர்க உலக அமைதி.



1 comment:

nila said...

சந்துரு...
ஈழத்தின் மீது தாங்கள் கொன்டிருக்கும் பாசமும் அதன் வெளிப்பாடுகளும் மிகவும் உணர்ச்சிபூர்வமானவை.... தமிழின் மீதும் தமிழ் மக்களின் மீதும் உண்மையான பற்று கொண்ட ஒவ்வொரு நெஞ்சும் சொல்லத்துடிக்கும் வார்த்தைகள்...
இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் நாம் நம் மக்களின் மீது கொண்ட பற்றும் பந்தமும், அவர்களின் ரத்தமும் இங்கே இருக்கும் அரசியல்வியாதிகளுக்கு தங்களுக்கு சாதகமான அரசியல் செய்ய நல்ல பிடிமானம்...
இந்த வியாதிகள் நம்மை விட்டு ஒழியும் வரை நம் கண்ணீர் காயும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இத்துப்போய்க்கொண்டிருக்கிறது....

Post a Comment