Monday, November 15, 2010

ஞாபகங்கள்


















பிரிவுகளின் பாரத்தை மனதில் சுமந்து,
கனவுகளை நோக்கி பயணம் தொடர
மனதின் வாசலில் பழைய முகங்கள்,
பழைய ஞாபகங்கள் புயலாய் வீசுகின்றன.

கண்கள் குளிர காட்சிகள் பல கண்டாலும்,
என் கண்கள் முழுக்க உங்கள் பிம்பங்களே நிறைந்துள்ளன,
உங்கள் முகம் காண ஏங்குகின்றன.

காதுகள் இனிக்க பலர் பேசினாலும்,
நீங்கள் பேசிய வார்த்தைகள் மட்டும் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டு இருக்கின்றன,
உங்கள் குரல் கேட்க தவம் இருக்கின்றன்.

வாய்கள் வலிக்க நான் பேசினாலும்,
உங்களுடன் ஒரு வார்த்தை பேச துடிக்கின்றன.

வாழ்க்கை பாதை எங்கு சென்றாலும்,
நீங்கள் தான் என் வாழ்க்கை, உங்களிடம் தான் என் சந்தோசம் உள்ளது.
இலக்குகள் புதிது, பாதைகள் புதிது,
மனதில் உள்ள உங்கள் ஞாபகங்கள் என்றும் புதிது.

உங்கள் ஞாபகங்கள் என்னிடம் உள்ளவரை,
நம்மை யாரும் பிரிக்க இயலாது.
என் உயிர் உள்ளவரை,
உங்கள் ஞாபகங்களை மறக்கவும் இயலாது.